மனநல மருத்துவமனைகளில் சட்டத்துக்குப் புறம்பாக நோயாளிகள்: மனித உரிமைகள் ஆணையம் குற்றச்சாட்டு | Mentally ill people kept in hospitals post recovery

Share

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாகவே முன்வந்து, மத்திய சுகாதாரத் துறைச் செயலர், சுகாதார சேவைகள் டைரக்டர் ஜெனரல், மாநில சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள், பெருநகர காவல்துறை டிஜிபி மற்றும் கமிஷனர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், குணமடைந்த நோயாளிகளை சட்டத்துக்குப் புறம்பான வகையில் மருத்துவமனையில் வைத்திருப்பது, மனநல ஆணையம் அமைப்பது, மாநில மனநல மதிப்பாய்வுக் குழு அமைத்தல், மாநில மனநல பராமரிப்புக்கான விதிமுறைகள், நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு வசதிகள், ஊழியர்கள் நியமனம் குறித்த அப்டேட், மனநல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பேராசிரியர்கள் நியமனம், மனநல மருத்துவமனைகளில் அவசர கால சேவைகள், 5 ஆண்டுகளில் வீடு திரும்பியுள்ள நோயாளிகள் குறித்த தரவுகள், மனநல நோயாளிகளின் உணவுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி மற்றும் அதற்குச் செலுத்தப்பட்ட உண்மையான தொகை, மருத்துவமனைகளின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான நிதித் தணிக்கை அறிக்கை ஆகியவை குறித்து எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்து மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரத் துறை செயலர்களை அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com