அதில் அவர்களுக்கு ஒவ்வோர் உணவின் பெயரும், அந்த உணவு எப்படி இருக்கும், அதன் வாசம், சுவை, உங்களுக்கு அந்த உணவிலிருந்து எந்த அளவிற்கு வேண்டும் என அனைத்தையும் கற்பனை செய்து கொள்ளச் சொல்லப்பட்டது.
இந்த ஆய்வில், வறுக்கப்பட்ட சீஸ் போன்ற உயர் கலோரி உணவுகளின் பெயர்களைக் கேட்டபோது, பருமனானவர்கள் நடத்தை மற்றும் அறிவாற்றல் கட்டுப்பாட்டின் செயல்பாடு (cognitive control) குறைவாக இருந்துள்ளது. அதோடு இரு குழுக்களிலும் மன அழுத்தம், மூளையில் உணவு தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது.
இது குறித்து பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் சூசன் கார்னெல் கூறுகையில்,“இரு குழுக்களிலும் மன அழுத்தம் மற்றும் மூளையின் ரெஸ்பான்ஸ் இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பை நாங்கள் கண்டறிந்தோம்.
உணர்ச்சி வசப்படும்போது அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது, அந்த நேரத்தில் சாப்பிடுவது உங்களை நன்றாக உணர வைக்கும். அதே வேளையில், அதிகப்படியான உணவு உண்கிறோம் என்ற குற்ற உணர்வையும் இது உங்களுக்கு ஏற்படுத்தும். இதைச் சமாளிக்கச் சிறந்த வழி, உங்கள் உணர்வுகளை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கையாள்வது தான். கவனமாக இருப்பதோடு, உங்கள் தூக்க சுழற்சியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆய்வு குறித்தான தகவல்கள் PLOS ONE என்ற பத்திரிகையில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.