மத நிகழ்ச்சியில் பங்கேற்காத இந்திய ராணுவ அதிகாரி பணிநீக்கம் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

Share

இராணுவ வீரர், பணி நீக்கம், சீக்கிய ரெஜிமண்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இன்றைய தினம் (ஜூன் 2, திங்கட்கிழமை) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மத நிகழ்ச்சியில் பங்கேற்காத கிறித்தவ ராணுவ அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அவரின் பணி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், “ராணுவத்தில் கடந்த 2017-ம் ஆண்டு லெப்டினன்ட்டாக பணியில் சேர்ந்தவர் சாமுவேல் கமலேசன். இவர் சீக்கியர் படைப்பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்தப் படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் கோயில் ஒன்றும், குருத்துவாரா ஒன்றும் இருந்தது. இங்கு வீரர்கள் பங்கேற்கும் வழிபாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சாமுவேல் கமலேசன் மறுப்பு தெரிவித்தார். தான் கிறித்தவ சமயத்தை சேர்ந்தவர் என்றும், சீக்கியர் படைப்பிரிவு முகாமில் தேவாலயம் மற்றும் அனைத்து மதத்தினரும் வழிபாடு நடத்தும் சர்வ தர்ம தலம் போன்றவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com