மது அருந்திய பிறகு குடலில் இருந்து கல்லீரலுக்கு ரத்தம் மூலம் வருகிறது. ஒருவருடைய போதையின் அளவு அவருடைய ரத்தத்தில் கலந்து உள்ள ஆல்கஹால் அளவைப் பொறுத்தது. இதனால்தான் (BAC-blood alcohol concentration) என்று போதையின் அளவை ரத்தத்தின் மூலம் கணிக்கிறோம். நேரம் செல்லச் செல்ல, கல்லீரலில் ஆல்கஹால் வளர் சிதை மாற்றம் நடந்த பிறகு இது மெல்ல மெல்ல குறையத் தொடங்கும்.
அப்படியே போதையின் அளவும் இறங்கி வரும். ஒரே வயது, உடல் நிலை கொண்ட ஆண்கள் இருவர் ஒரே அளவு மது அருந்தும்போது இருவரின் போதையின் அளவு மாறுபடுவதின் காரணத்துக்கும் கல்லீரலின் செயல்கள் மட்டுமே காரணம். இதேபோல் ஒருவர் 20 வருடம் குடித்தாலும் எந்த வித பக்க விளைவுகள் இல்லாமல் இருப்பதற்கும், குறைந்த அளவே குடித்த நபர் உடல் நிலை பாதிக்கப்படுவதற்கும், போதையின் அளவு வேறுபடவும் அவரவரின் மரபணு மட்டுமே காரணம் ஆகிறது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும், வித்தியாசம் வருவதற்கு காரணம் இந்த நொதியின் அளவு பெண்களுக்கு குறைவாக இருக்கும் காரணத்தினால், அவர்களுக்கு அதிக அளவில் அதிக நேரம் ரத்ததில் ஆல்கஹால் கலந்து இருக்கும். அதனால்தான் ஆண்கள் குடிக்கும் அளவில் பாதி குடித்தாலே அதற்கு ஈடான BAC blood alcohol concentration வந்துவிடும். ஆல்கஹாலுடன் ஆல்கஹால் டிஹைட்ராக்சினேஸ் என்ற நொதி மூலம் அசிட்டால்டிஹைட் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறு ஆகப் பிரிக்கப்படுகிறது. இந்த அசிட்டால்டிஹைட் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் காரணி ஆகும்.
இது அளவு அதிகமாக உற்பத்தி செய்யப்படும்போது ரத்தம் மூலம் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கண்கள் சிவந்த நிலையில் இதய துடிப்பு அதிகமாக, தலை சுற்றல், மயக்கம், கை கால் நடுக்கம் வரை ஏற்பட இதுவே காரணம். அதாவது ஒருவருடைய ரத்தத்தில் அதிகளவு ஆல்கஹால் கலந்தது என்பதை இதன்மூலம் அறியலாம். மேலும் இந்த அசிட்டால்டிஹைட் புற்றுநோய் உருவாக்கும் காரணி ஆகும்.