மதுரை மக்களை அடிமையாக்கிய குண்டு பாய் ஹைதரபாத் பிரியாணி.. எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

Share

காதர் பாய் பிரியாணிக்கு சந்தானம் எப்படி அடிமைன்னு சொல்றாரோ, அதேபோல் குண்டு பாய் ஹைதராபாத் பிரியாணிக்கு மதுரை மக்களும் அடிமை அப்படின்னு கூட சொல்லலாம்.

அப்படிப்பட்ட குண்டு பாய் ஸ்டைல்ல ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது அப்படிங்கற இந்த வீடியோல நாம பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

பரபரப்பா இருக்கக்கூடிய இந்த பகுதியில காலையில பத்து மணியிலிருந்து பிரியாணி செய்ய ஸ்டார்ட் பண்றாரு குண்டு பாய்.ஒரு பெரிய டபரால எண்ணெயை ஊத்தி அதுல வெட்டி வச்ச வெங்காயத்தைப் போட்டு, பட்ட, கிராம்பு, ஏலக்காய் இந்த மூன்று வாசனை பொருட்களையும் கூடவே எக்கச்சக்கமான பச்சை மிளகாய் போட்டு வெங்காயம் வெண்ணிறமா வர வரைக்கும் நன்றாக வதக்க வேண்டும்.

ஒரு பத்து நிமிடத்தில் வெங்காயம் பொன்னிறமா வந்த பிறகு கரம் மசாலா, சீரகத்தூள், மிளகாய் தூள், ஸ்பெஷல் மசாலா போன்ற மசாலாவை ஆட் பண்ணி கூடவே இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தயிரையும் ஊத்தி நன்றாக கலர வேண்டும். பின்பு வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் மசாலா எல்லாம் நன்றாக கலந்த பிறகு தேவையான அளவு தண்ணீரை ஊத்தி அதன் மேலே கொத்தமல்லியை தூவி விட வேண்டும்.

இதற்கிடையிலேயே ஒரு பெரிய தோசை தாவா எடுத்து டபராக்கு அடியில தம் கொடுக்கிற வகையில செட் பண்ணிட்டு டபராவை ஒரு 10 நிமிடத்திற்கு மூடி போட்டு வைத்து விட வேண்டும்.டபராவுல இருக்கக்கூடிய வெங்காயம் மற்றும் மசாலா எண்ணெய் கூடி வரும் நேரத்தில் ஒரு பக்கம் பிரியாணியில் கலக்க வேண்டிய கறித்துண்டுகளை நன்றாக கழுவி அதற்கு தேவையான ஸ்பெஷல் மசாலாவுடன் சேர்த்து கலக்கி வைத்து கொள்ள வேண்டும்.

மறுபக்கம் ஏற்கனவே புதினா, கொத்தமல்லி, ஏலக்காய், லாவங்கம், பட்டை போன்ற பொருட்களை கொண்டு கொதிக்க வைக்கப்பட்ட சுடுதண்ணீரில் ஊறவைக்கப்பட்ட சீராக சம்பா அரிசியை நன்றாக கழுவி வடிகட்டி சுடுதண்ணீரில் கொட்டி 15 நிமிடத்திற்கு வேகவைத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் போடப்படும் ஏலக்காய் லவங்கம் புதினா போன்றவற்றால் பிரியாணிக்கு கூடுதல் சுவை தரும் என்கின்றனர்.

பின்பு மசாலா கலக்கி வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெய் கூடி வந்த கிரேவியில் கலந்து நன்றாக கலக்கி விட வேண்டும். மசாலா கிரேவியும் சிக்கன் துண்டும் செட் ஆகக்கூடிய வகையில் சிறிது நேரம் மூடி வைத்துவிட வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் வேகவைக்கப்பட்ட சீரக சம்பா அரிசியை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை அடுத்து வடிகட்டி வைக்கப்பட்ட அரிசியை எடுத்து சிக்கன் மசாலா கிரேவியின் மீதுகொட்டி விட வேண்டும். ஒரு பகுதியில் கால் பகுதி மசாலாவும் மீதி முக்கா பகுதி அளவில் அரிசியைப் போட்டு நிரப்பிய பிறகு அதன் மேலே மஞ்சள், ஆரஞ்சுபோன்ற கேசரி பவுடர்களை எண்ணையுடன் கலந்து அதனை அரிசியின் மேலே பரப்பி கூடவே நன்றாக பொரித்து வைக்கப்பட்ட வெங்காயத்தை எடுத்து பரபரவென்று அரிசியின் மேல் முழுவதும் தூவி விட வேண்டும்.

பின்பு தண்ணீரில் ஈரத்துணி ஒன்றை நனைத்து அதனை டபராவின் விளிம்பு பகுதிகளில் சுற்றி வைத்து அதன் மேலே மூடி போட்டு முழுக்க முழுக்க தம் கொடுக்கக் கூடிய வகையில் கற்களை டபரா மேலே வைத்து அரை மணி நேரத்திற்கு அடுப்பை ஸ்லோ செய்து விட்டு வேக வைக்க வேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகு டபராவை திறந்து பார்த்தால் கமகமவென்று பிரியாணியின் வாசனை மூக்கை துளைக்க அதன் மேலே நெய்களை பரப்பரவென்று தெளித்து பின்பு அடிப்பகுதியில் இருக்கக்கூடிய கிரேவியுடன் அரிசியை சற்று கிளறி விட்டுப் பார்த்தால் கலர்ஃபுல்லான பக்காவான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ரெடி ஆகி விடுகின்றது.

இந்த ஹைதராபாத் சிக்கன் பிரியாணியோடு ரைத்தா, சிக்கன் கிரேவி, கூடுதலாக முட்டை போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் நாமளும் ஹைதராபாத் பிரியாணிக்கு அடிமையாகி விடுவோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com