மதுரையில் ஃபேமஸாகும் ஹைதராபாத் பிரியாணி..! குண்டு பாய் கடையில சாப்பிட்டுருக்கீங்களா?

Share

ஹைதராபாத் பிரியாணி சாப்பிடணும் அப்படின்னா ஹைதராபாத் போகணும் அப்படின்னு அவசியம் இல்ல. இப்ப நம்ம மதுரையிலயும் பக்காவான ஹைதராபாத் பிரியாணி கிடைக்குது. எங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?, இந்த செய்தி தொகுப்ப பார்த்து தெரிஞ்சிகோங்க.

பிரியாணி அப்படிங்கர வார்தை கேட்டாலே நம்ம எல்லாருக்கும் நாக்கு உச்சு கொட்டதான் தோணும். அதுவும் பாஸ்மதி அரிசில, ஹைதராபாத் பிரியாணி சொன்னா கேக்கவா வேணும். யாருக்கு தான் இந்த ஹைதராபாத் பிரியாணி பிடிக்காது. இந்த பிரியாணிய சாப்பிடணும்னா மதுரை மக்களா இருக்கட்டும், வெளியூர் மக்களா இருக்கட்டும் சாப்பாட்டுக்கு பெயர் போன மதுரையில் கிடைக்குது சொன்னா நம்புவீங்களா.

இந்த பிரியாணி நம்ம மதுரையில் இப்ப பேமஸ் ஆயிட்டு வருது. எங்க இந்த ஹைதராபாத் பிரியாணி கிடைக்குது அப்படிங்குறத இந்த வீடியோவுல பாத்து தெரிஞ்சிகோங்க. மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு பகுதியில் குண்டு பாய் ஹைதராபாத் பிரியாணி கடையில தான் கமகமன்னு பக்காவான ஹைதராபாத் பிரியாணிய குடுத்துட்டு இருக்காங்க.

குண்டு பாய் பிரியாணி கடை

பொதுவாகவே ஹைதராபாத் பிரியாணி அப்படின்னா சீரக சம்பா அரிசியில பொறித்த வெங்காயத்தை பரபரன்னு தூவி அது மேல கிஸ்மிஸ் முந்திரி, நெய் எல்லாம் ஊத்தி சாப்பிட்டா அதுதான் ஹைதராபாத் பிரியாணி அப்படின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரியான பிரியாணியை நம்ம மதுரையிலையும் கொடுக்கணும் அப்படின்னு ஒரு சாதாரண தள்ளு வண்டியில காலைல 10 மணியிலிருந்து ஒரு பெரிய டபரால பிரியாணியை செய்ய ஸ்டார்ட் பண்றாரு.

கரியெல்லாம் வெட்டி மசாலா தடவி அரிசியல வேகவைத்து தம் போட்டு மூடி வச்சு பார்த்தா இந்த பிரியாணிய வாங்கி சாப்பிடணும் தோணும். இந்த பிரியாணிய வரிசையா பணத்தை கொடுத்து டோக்கன் போட்டு வச்சுக்கிறாங்க அந்த அளவுக்கு இந்த பிரியாணியோட டேஸ்ட் மக்கள சுண்டி இழுத்துட்டு வருது.

ஒரு மணி அளவில் இந்த கடைய சுத்தியே கூட்டம் இருக்க தம் போட்டு வச்ச பிரியாணிய எடுத்து சிக்கன் பீஸோட, ரைத்தா, கிரேவி, பிரியாணி அப்படின்னு கடகடன்னு பார்சல் பண்ணி கொடுத்துக்கிட்டே இருக்காங்க. பாக்குறதுக்கு கலர் ஃபுல்லா, லெக் பீஸ் ஓட, ரைத்தா, பிரட் அல்வா, கிரேவி உடன் குறைந்த விலையில் அதாவது 150 ரூபாய் என்ற விலையில ருசியா இருக்கிறதுனால இந்த கடைக்கு எப்போதுமே ஒரு தனி கூட்டம் இருந்துகிட்டே இருக்குண்ணா பாருங்களேன்.

மதுர நாளே உணவுக்கு ஃபேமஸ் சொல்லுவாங்க ஆனா மதுரையில ஒரு பக்கவான ஹைதராபாத் பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு நினைச்சா நாங்க இந்து கடைக்கு வந்து தான் சாப்பிடுவோம். ஏன்னா அந்த அளவுக்கு ஹைதராபாத்தில் இருப்பது போலவே இங்கு ஹைதராபாத் பிரியாணி கிடைக்குது அப்படின்னு சொல்றாங்க.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com