மதுராந்தகம் மேலவளம்பேட்டையில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: எம்எல்ஏ க.சுந்தர், எம்பி செல்வம் பங்கேற்பு

Share

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்,   மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக மற்றும் கருங்குழி பேரூராட்சி திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம்  மேலவளம்பேட்டை கிராமத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் தசரதன், துணை தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட  செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு பெருந்தலைவர் செம்பருத்தி ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.

க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ‘‘இளைஞர்கள் திமுக வளர்ச்சி பணியில் ஈடுபடவேண்டும்.  வாக்குச்சாவடி முகவர்களை  தேர்வு செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.  இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும். 17 வயது முடிவடைந்த இளைஞர்கள், பெண்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்காளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதில், கட்சி நிர்வாகிகள்  ஆறுமுகம், தமிழரசன், சித்ரா திருஞானச்செல்வம், மணியன், பார்த்தசாரதி, சுந்தரவரதன், தேவராஜ் மற்றும் ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com