மசூர் வடை மசூர் வடை தான்பா! – News18 Tamil

Share

மழைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மீதம் இருக்கும் நிலையிலேயே வட இந்தியாவின் பல பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. கோடை வெயிலால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நமது மக்கள் இந்த மழையினால் ஒரு புத்துணர்ச்சி அடைந்துள்ளனர். அதே புத்துணர்ச்சியோடு மழையை பார்த்துக் கொண்டே நமக்கு பிடித்த உணவை சுவைத்துக் கொண்டே அந்த மழையை ரசிப்பது ஒரு தனி சுகம்.

அந்த வகையில் மசூர் பருப்பு எனும் பருப்பை கொண்டு செய்யப்படும் ஒரு ரெசிபியை தான் நாம் இங்கு காணப் போகிறோம். பொதுவாக மசூர் பருப்பு எனும் இந்த பருப்பு வகை இருப்பதே பலருக்கு தெரியாது. அவ்வாறு தெரிந்தாலும் அது அவர்களுக்கு பிடித்தமான ஒன்றா என்றால் கேள்விக்குறிதான்.

ஆனால் நாம் இப்போது அந்த மசூர் பருப்பை பயன்படுத்தி செய்யபோகும் மசூர் வடை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

Read More : எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க… ரெசிபி இதோ…

இதை வெறும் 30 நிமிடங்களில் தயார் செய்ய முடியும். இது மற்ற வடைகளை செய்ய பயன்படுத்தும் டீப் ஃப்ரை(Deep Fry) என்னும் முழுவதுமாக எண்ணெய்யில் மிதக்க விட்டு பொரிக்கும் முறையைப் போல் அல்லாமல் ஷேலோ ஃப்ரை(Shallow Fry) என்னும் குறைவான எண்ணெய்யை பயன்படுத்தி பொரிப்பதால் உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாக உள்ளது.

பக்கோடா, பஜ்ஜி, போண்டா போன்ற ஒரே வகை நொறுக்கு தீனிகளை உண்டு சலிப்படைந்த பலருக்கு இந்த மசூர் வடை நொறுக்கு தீனி ஒரு நல்ல மாற்றாக அமையும்.

தேவைப்படும் பொருட்கள்:

மசூர் பருப்பு – 1 கப்

பச்சை மிளகாய் – 2

மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் – 1

கடுகு எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 4

இஞ்சி – 1 அங்குலம்

சீரகப்பொடி – 1 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

கொத்தமல்லி தழை – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முதலில் மசூர் பருப்பை ஊற வைக்கவும். மசூர் பருப்பை ¾ அளவு தண்ணீரில் கழுவி பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின்னர் மசூர் பருப்பு கலவையை தயார் செய்யவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பிறகு அதனை உலர்த்திய மசூர் பருப்பு கலவையுடன் நன்றாக கலக்கவும்.

இப்பொழுது வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அவற்றை மெல்லியதாக அதேசமயம் நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பருப்புக் கலவையை ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு அதனுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகப்பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்றாக கலக்கவும் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து கலக்கவும்.

தேவையான அளவு கடுகு எண்ணெயை நான்-ஸ்டிக் தவாவில் வைத்து சூடு படுத்தவும். பிறகு நாம் செய்து வைத்த பருப்பு கலவையை கரண்டியில் எடுத்து, தவாவில் இட்டு மிதமான அளவில் அழுத்தம் கொடுத்து பொரிக்க வேண்டும். வடையானது வட்ட வடிவிலும் அதே சமயம் மிகவும் தட்டையாக ஆகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். வட்ட வடிவில் உள்ள வடையானது இரண்டு புறமும் பொன்னிறத்தில் வரும் வரை பொரித்து எடுத்துகொள்ள வேண்டும்.

இப்போது நமக்குத் தேவையான, சூடான சுவையான மசூர் பருப்பு வடை தயார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com