“இந்தப் பரிசுத்தொகை மூலமா இத்தனைநாள் நாங்கப் பட்டக் கஷ்டம் எல்லாம் தீர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன். ஷீட் போட்ட வாடகை வீட்லதான் குடியிருந்தோம். ஆட்டோ வாடகை, வீட்டு வாடகை, குடும்பச் செலவு, காசிமாவுக்கான போக்குவரத்து கட்டணம் எல்லாமே கடன் வாங்கித்தான் சமாளிச்சுட்டு வந்தோம். என் பொண்ணாலதான் எங்கக் குடும்பத்துக்கு இப்போ நல்லது நடந்திருக்கு. அவளுக்கு பயிற்சி கொடுத்ததுக்கு ரொம்ப பெருமைப்படுறேன். நாங்கப் பட்டக் கஷ்டம் எதுவும் வீண் போகல. குகேஷுக்கு மட்டும் 5 கோடி ரூபாய் பரிசு அறிவிச்சிருக்காங்க, காசிமாவுக்கு அறிவிக்காதது பற்றி என்கிட்ட கேட்டு வருத்தத்தை பதிவு செஞ்சது விகடன்தான். மனவருத்தம் இருந்ததால நானும் சொன்னேன்.
அதிகாரிங்க சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் போய்ட்டிருக்குன்னும் அதனால்தான் தாமதம்னு சொன்னாங்க. எங்களை கூப்பிடும்போது, இவ்ளோ பெரிய தொகை கிடைக்கும்னு எதிர்பார்க்கல. ஆனா, தமிழ்நாடு அரசு ஏதாவது செய்யும்ங்கிற நம்பிக்கை இருந்தது. அதுவும், கேரம் வரலாற்றிலேயே 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை இதுவரை கொடுத்ததில்லை. காசிமாவுக்குத்தான் முதல்முறைன்னு தெரிஞ்சப்போ இன்னும் பெருமையாகிடுச்சு. காசிமா மட்டுமில்லாம மற்ற வீராங்கனைகள் நாகஜோதி, மித்ராவுக்கும் தலா, 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினார். திரும்பவும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சாருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நன்றியை தெரிவிச்சுக்கிறேன்” என்கிறார் உணர்ச்சிப்பெருக்குடன்.