மகராஷ்டிர அரசியல் நெருக்கடி: மாலை 5 மணிக்கு சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Share

தாக்கரே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உத்தவ் தாக்கரே.

சிவசேனை கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 34 ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இன்று மாலை சிவசேனைக் கட்சி தமது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டவுள்ளது.

மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது.

வீடியோ கான்பரன்சிங் முறையில் உத்தவ் தாக்கரே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், இந்தக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகுவார் என்று ஐயம் இருந்தது. அது நடக்கவில்லை.

அதற்குப் பதிலாக சிவசேனைக் கட்சி தமது எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை 5 மணிக்கு நடக்கும் என்று அறிவித்துள்ளது. கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்துக்கு வரவேண்டும் என்றும், வர முடியாதவர்கள் காரணத்தை தெரிவித்து கடிதம் அனுப்பவேண்டும் என்றும், அப்படி வரவும் வராமல் கடிதமும் அனுப்பாதவர்கள் கட்சிக்கு எதிராகச் சென்றதாகக் கருதப்பட்டு அவர்களை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவசேனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com