இந்நிலையில் கடந்த சில நாள்களுக்குமுன் ஜெயசீலனை பிடிப்பதற்காக சென்ற குத்தாலம் காவல் ஆய்வாளர், ஜெயசீலன் எங்கே என்று கேட்டு தந்தை அர்ஜுனனை தகாத வார்த்தையால் பேசி கையை பிடித்து இழுத்து அவமரியாதை செய்ததாகவும், இதனால் மனஉளச்சலில் இருந்த ஜெயசீலனின் தந்தை அர்ஜுணன் பூச்சிமருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அர்ஜூனன், பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக் கிடங்கில் வைக்கப்பட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக குத்தாலம் காவல் ஆய்வாளர் வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்த அர்ஜுணன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் நாம்தமிழர் கட்சியினர் காவல் துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரு டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், “அர்ஜுணன் தற்கொலை செய்துகொண்டது குறித்தும், ஜெயசீலன் வழக்குகளை வேறு காவல் ஆய்வாளர் மூலம் நேர்மையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டு அர்ஜுணன் உடலை பெற்றுச்சென்றனர்.