போலி ஆவண கடவுச்சீட்டு வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை: தமிழக அரசு

Share

மதுரை பாஸ்போர்ட் அலுவலகம்

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் அடிப்படையில் நூற்றுக்கணக்கில் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் புலன் விசாரணை செய்து வரும் க்யூ பிரிவு காவல்துறை, விரைவில் தமது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அந்த கடிதத்தை அவர் அனுப்பி வைத்திருந்தார்.

அந்த கடிதத்தை ஆளுநர் ரவியிடம் வியாழக்கிழமை நேரிலும் அண்ணாமலை அளித்திருந்தார். அதில் போலி ஆவணங்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது போதுமான நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என்றும் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்குமாறும் அண்ணாமலை கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com