வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
வணக்கம் வாசகர்களே.
ஜப்பான்காரங்க உழைப்புக்கு ரொம்பவே பேர் போனவர்கள். அவர்கள் வேலை நிறுத்தம் மாதிரி போராட்டம் செஞ்சாக்கூட வித்தியாசமா செய்வாங்கனு நாம கேள்விப்பட்டிருப்போம். அதாவது ஒரு ஷூ கம்பெனில போராட்டம் பண்ணுறேன்னு சொல்லி, வேலைய நிறுத்தாமா, வெறும் ஒரு காலுக்கு மட்டும் ஷூ தயாரிப்பாங்கன்னு நாம படிச்சிருக்கோம்.
அதே மாதிரி சமீபத்தில் இத்தாலில ஒரு வித்தியாசமான போராட்டத்திற்கு இவங்க தயார் ஆகிட்டு இருக்காங்க. ஆமாங்க, அவங்களோட மிகவும் பிரியமான உணவான பாஸ்தா, இத ஒரு வாரத்துக்கு சூப்பர்மார்கெட்ல இருந்து வாங்காம போராட்டம் பண்ண கிளம்பியிருக்காங்க.
ஏன் அப்படி ஒரு போராட்டம்? வேறென்ன, எக்குதப்பா ஏறியிருக்குற விலைவாசி தான்.
அத்தியாவசியமான பொருளான பாஸ்தா, கடந்த ஒரு வருடத்துல கிட்டத்தட்ட 20% விலை ஏறிடிச்சி அப்பிடின்ற எரிச்சல். விலைவாசியை இத்தாலிய அரசு கட்டுப்படுத்தவோ, இல்லை அதை கட்டுக்குள்ள வைக்கவோ எந்த ஒரு முயற்சியும் எடுக்கலேன்னு தான் இந்த போராட்டம்.
ஒரு காலத்துல கோதுமையை வாங்கி, மாவா அரைச்சு, தண்ணியும் முட்டையும் சேர்த்து இவங்க கையிலேயே விதவிதமான பாஸ்தா செஞ்சிட்டு இருந்தாங்க.