போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்களை ஜனவரி 8 திங்கள்கிழமையன்று பரிசீலித்த நீதிபதி சோபி தாமஸ், விட்னஸ் பாக்ஸ் குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அவர் கூறுகையில், “போக்ஸோ நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாட்சி சொல்ல இடம் உள்ளது. குழந்தைகள் சாட்சி சொல்ல இருக்க வைக்கப்படுகிற இடம் வெளிச்சம்கூட புகாத அளவுக்கு இறுக்கமாக நாய்க்கூண்டைப் ( dog kennels) போல் உள்ளது.
நாய்க்கூண்டிலாவது வெளிச்சம் உள்ளே வரக்கூடிய அளவுக்குக் கம்பிகள் உள்ளன. இங்கு குழந்தைகள் மூடிய இடத்துக்குள் இருக்க வைக்கப்படுகின்றனர்.
இதில் அவர்களின் முகம் மட்டுமே தெரியும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்களைப் பார்க்க முடியாதபடி, குழந்தைகளின் முகம் மட்டுமே தெரியும்.