பொன்னியின் செல்வன்: டிவி தொடராக எடுக்க விரும்பிய கமல்; நோ சொன்ன விக்ரம் – அப்போது என்ன நடந்தது? | Vikram declined Ponniyin Selvan when it was offered to him by Kamal Haasan

Share

இதுபற்றிப் பேசிய விக்ரம், “நீண்ட நாள்களுக்கு முன், கமல் சார் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, தான் பொன்னியின் செல்வனை எடுக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் அதைத் தொலைக்காட்சிக்காக எடுக்க விரும்பினார். அப்போது அவர் என்னிடம், ‘அதில் நீங்கள் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் எந்த வேடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து நடிக்கலாம்’ என்றார். அதில் மூன்று வேடங்களில் ஏதாவது ஒன்றைச் செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் அவரிடம், முதலில் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் படிக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன்.

விக்ரம், கமல்

விக்ரம், கமல்

அதன் பின், ‘இக்கதையை டிவிக்காக எடுக்கப்போவதால் இதில் நடிப்பதைப் பற்றி நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு நடிகனாக நான் இதைச் செய்ய மாட்டேன்’ என்று கமல் சார் என்னிடம் கூறியிருந்தார். அடுத்த நாள், நான் அவரிடம் திரும்பி வந்து, ‘பொன்னியின் செல்வன்’ பெரிய திரைக்கு வரும் வரை காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ‘பொன்னியின் செல்வன்’ கதையில் நடிப்பதற்காக நான் எப்போதும் ஒருவரின் மனதில் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com