தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஹரிகிருஸ்ணன் (21) ப்ளஸ் 1 படித்துவிட்டு எல்க்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் இவருடைய நண்பர் ராம்குமார் மெயின் ரோட்டுக்கு அழைத்துள்ளார். அவரைக் காண மெயின்ரோட்டில் உள்ள ஏடிஎம் சென்டர் அருகே பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
பிறகு ராம்குமார் பைக்கை ஓட்ட ஹரிகிருஸ்ணன் பின்சீட்டில் அமர்ந்து சென்றுள்ளார். சிறிதுநேரத்தில் திடீரென பைக்கின் டூம்பகுதியில் இருந்து கட்டுவிரியன் பாம்பு வெளிவந்துள்ளது.
இதைக் கண்டதும் வண்டி ஓட்டிய ராம்குமார் அலறிக்கொண்டு ஹேண்ட்பாரில் இருந்து கையைத் தூக்கியுள்ளார்.
பைக் கீழே விழுந்துவிடும் என ஹேண்ட்பாரை பிடித்து ஹரிகிருஸ்ணன் பிரேக் போட்டுள்ளார். அப்போது அவருடைய வலது கையைப் பாம்பு கடித்தது.