பெரிய மார்பகங்கள் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கலாம்?பொருத்தமான உள்ளாடை ஏன் அவசியம்?

Share

பெரிய மார்பகங்கள் இருப்பதால் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நல பாதிப்புகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில பெண்களுக்கு, பெரிய மார்பகங்கள் இருப்பது அன்றாட வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தும்

“எனக்குப் பெரிய மார்பகங்கள் இருப்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க, என் தோள்களைச் சற்று குனிந்தபடியே வைத்துக்கொண்டு நடப்பேன். நான் மிகவும் வெட்கப்பட்டேன் என்பதால் அது எனக்கு நினைவில் இருக்கிறது.”

கடந்த 2010ஆம் ஆண்டில், அர்ஜென்டினாவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரான ராக்கேல், மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

தற்போது 52 வயதாகும் அவர், இந்த அறுவை சிகிச்சை தனக்கு முன்பில்லாத ஒரு “சுதந்திர உணர்வை” ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.

உலகின் பல பகுதிகளில் பெரிய மார்பகங்கள் இருப்பது கவர்ச்சிகரமான விஷயமாக கருதப்பட்டாலும், உண்மை கடினமானதாக உள்ளது. பெண்களின் ஆரோக்கியத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் அது குறிப்பிடத்தக்க பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

நாள்பட்ட முதுகு வலி, தலை வலி, மோசமான தோரணை, உணர்வின்மை, தூக்க கலக்கம் ஆகியவற்றுடன் மன ஆரோக்கியத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பெரிய மார்பகங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com