பெரியார் சிலையில் இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

Share

பெரியார் சிலைக்கு கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய  சீர்திருத்தவாதிகளில் ஒருவராக கருதப்படும் பெரியார் ஈ.வே.ராமசாமி கடவுள் மறுப்பு, சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றம் என பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கியவர். தமிழத்தின் பெரும்பாலான இடங்களில் பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரியார் கூறிய இறை மறுப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இந்நிலையில், பெரியார் சிலையின் கீழுலுள்ள வாசகங்கள், பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தை திராவிட இயக்கங்கள் தவிர்த்து வேறு யாராலும் ஆள முடியாது: செங்கோட்டையன்

மேலும், பெரியாரது  கருத்து மத அடிப்படையிலான பாகுபாடு கூடாது என்பதற்கு எதிராக உள்ளதாகவும், இது தனிமனிதனின் சுதந்திரமான நம்பிக்கைக்கு எதிர் எனவும் மனுதாரர் முறையிட்டுள்ளார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க மனுதாரர் முறையிட்ட நிலையில், விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்து உத்தரவிட்டது

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com