பெண்கள், பொருளாதாரம்: பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி

Share

காணொளிக் குறிப்பு,

பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி

மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளாக மான் தேஷி மகிளா சககாரி வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்குத் தொடங்கி பணத்தை வைப்பு செய்யலாம். ஆனால், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்த வங்கி ஒரு லட்சம் பேருக்கு கடன் வழங்கியுள்ளது. அதில் பெரும்பாலானோர் தொடர்ந்து கடன் பெறுபவர்கள்.

இந்த வங்கியில் 1.07 லட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர். அதில் 25 சதவிகிதம் ஆண்கள், 75 சதவிகிதம் பெண்கள்.

இந்த வங்கியில் கடன் பெற்று பல பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தையும் தொழிலையும் மேம்படுத்தியுள்ளனர்.

இது ‘சேஞ் மேக்கர்ஸ்` என்ற பிபிசி சிறப்புத் தொடரின் இரண்டாவது காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com