சேலம் பெண்கள் தனிக்கிளைச்சிறையில் சிறைவாசிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் குளிர்கால மன அழுத்த மாதம் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வருடத்தின் கடைசி மாதமான, குளிர்கால டிசம்பர் மாதத்தில் பொதுவாக பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அமரேஷ் புஜாரி மற்றும் கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முக சுந்தரம் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சேலம் பெண்கள் தனிக்கிளைச் சிறையில் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாகக் குளிர்கால மன அழுத்த மாதம் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கோலப்போட்டி, பலூன் ஊதுதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், திருக்குறள் ஒப்புவித்து விளக்கம் அளித்தல், மரம் நடுதல், கருத்துள்ள நாட்டுப்புற பாட்டு பாடுதல், ஒளவையார் மற்றும் நீதி தேவதை வேடம் அணிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.