பெண்களுக்கான மூலிகை என்று ஏன் சொல்லப்படுகிறது கற்றாழை?! – மூலிகை ரகசியம் – 8 I Amazing health benefits of Aloe Vera

Share

கற்றாழை செடிக்கு நீர் ஊற்றிப் பராமரிக்கும் போது, விரைவில் தாய் கற்றாழைகளைச் சுற்றி பல குட்டிக் குட்டி கற்றாழைகள் உருவெடுக்கும். பார்ப்பதற்கு அழகாகத் தென்படும் குட்டி கற்றாழைகளை ரசித்து மகிழ இப்போதே ஒரு பெரிய கற்றாழையை மண்ணில் நிலைநிறுத்துங்கள். ஓரளவிற்கு வளர்ந்த கற்றாழைகள், வறண்ட சூழலையும் தாங்கும் தன்மை கொண்டவை. வளமான மண்ணும், அதிகம் நீர் தேங்காத இடமாகவும் இருந்தால் கற்றாழைகள் செழிப்பான வளர்ச்சியைக் கொடுக்கும்.

தாவரவியல் பெயர்:

Aloe vera

குடும்பம்:

Liliaceae

கண்டறிதல்:

வறண்ட சூழலில் பல ஆண்டுகள் வாழும் சிறுசெடி. மடல்கள் சதைப்பற்றுள்ளவை. தண்டு இல்லாத தாவரம் கற்றாழை. அதன் ஓரத்தில் முட்களைக் கொண்டிருக்கும். மடல்களை சிதைத்தால் கசப்புச் சுவை கொண்ட திரவம் வெளியாகும். மடல்களின் நுனி கூர்மையானது. இதன் உட்பகுதியில் இருக்கும் கூழ் போன்ற பகுதியே ’கற்றாழைச் சோறு’ என அழைக்கப்படுகிறது. பருவத்தில் நீண்டு வளர்ந்த தண்டில் பூக்கள் காணப்படும். ரெசிம் வகை மஞ்சரி.

தாவரவேதிப் பொருள்கள்:

Barbaloin, Aloesin, Amino acids, Anthroquinones, Lignins.

கற்றாழை… மூலிகைகளுள் பேரழகு!

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com