
பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் ஆண்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இது வக்கிரமா அல்லது உளவியல் சிக்கலா என்ற கேள்வி இருக்கலாம்.

பெண்களின் உள்ளாடைகளைத் திருடி ஒளித்து வைப்பதை `ஃபெட்டிஷ்’ (fetish) என்போம். `காரணமற்ற வெறித்தனமான காம எண்ணம்’ என்று சொல்லலாம். சில ஆண்களுக்கு, பெண்களின் உடல் பகுதிகளைப் பார்த்தால்தான் காம எண்ணமே வரும்.

சிலருக்கோ, உடல் பகுதிகளைப் பார்த்தால் ஆசை வராது. மாறாக பெண்களின் ஆடைகள், உள்ளாடைகள், பெண்களுடைய செருப்பு, மூக்குத்தி, கம்மல் போன்றவற்றைப் பார்த்தால்தான் ஆசை வரும். சில ஆண்கள், பெண்களின் சவுரி முடியைப் பார்த்தால்தான் உணர்ச்சிவசப்படுவார்கள்.

பேருந்தில் பெண்களை உரசுவது, செல்போனில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசுவது, பெண்களைக் கொடுமைப்படுத்தி அதைப் பார்த்து மகிழ்வது என இப்படிப்பட்ட அப்நார்மல் நடத்தைகள் நிறைய இருக்கின்றன.

இந்த ஆண்களிடம் `ஏன் இப்படிச் செய்கிறீர்கள்’ என்று கேட்டால், அவர்கள் நடத்தைக்கான காரணம் அவர்களுக்கே தெரியாது. இதில் ஒன்றுதான், மற்ற பெண்களின் உள்ளாடைகளை எடுத்து ஒளித்து வைப்பதும். மருத்துவ உலகம் இதற்கான காரணத்தை இதுவரை கண்டறியவில்லை.

பாலியல் மருத்துவத்தில் `செக்ஸுவல் கிரவுண்டிங்’ என்ற விஷயம் இருக்கிறது. ஆண்களிடம், `பெண்கள் எப்படியிருந்தால் உணர்ச்சிவசப்படுவீர்கள்’ என்று கேட்டால், பெரும்பான்மை ஆண்கள், `கவர்ச்சியாக’, `ஆடையில்லாமல்’ என்று சொல்வார்கள்.

இதுவே அவர்களுடைய அம்மாவையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ எதிர்பாராமல் `ஆடையில்லாமல்’ பார்த்துவிட்டால் உணர்ச்சிவசப்படமாட்டார்கள். மாறாகப் பதறுவார்கள்.

அம்மாவும் பெண்தான்; சகோதரியும் பெண்தான். எதிர்பாராமல் ஆடையற்று வேறு பார்த்துவிட்டார்கள். ஏன் செக்ஸுவல் உணர்வு ஏற்படவில்லை?

மூளையில் இருக்கிற செக்ஸ் சென்டரில் தூண்டுதல் ஏற்பட்டால்தான், ஆண்களுக்கு செக்ஸ் தூண்டுதல் வரும். அந்தத் தூண்டுதல் அம்மா, அக்கா, தங்கை, மகள் ஆகியோரை பார்க்கையில் நிகழாது. இதுதான் செக்ஸுவல் கிரவுண்டிங்.

செக்ஸுவல் கிரவுண்டிங்கை, மனைவி தவிர்த்த மற்ற பெண்களிடம் ஆண்கள் அப்ளை செய்ய முயற்சி செய்வது நல்லது.

பெண்களின் உள்ளாடைகளைத் திருடுகிற ஆண்களில் பலர், அதை வைத்து சுய இன்பமும் செய்வார்கள். உள்ளாடைகளைத் திருடுவது, அவற்றை வைத்து சுய இன்பம் செய்வது இரண்டுமே உளவியல் பிரச்னைகள் என்றாலும், சம்பந்தப்பட்ட ஆணுடைய மனைவியின் உள்ளாடை என்றால் ஓகே.

மற்ற பெண்களின் உள்ளாடை என்றால் அது குற்றம். காவல்துறையில் புகார் செய்யலாம். உள்ளாடைகளைத் திருடுவது, சம்பந்தப்பட்ட ஆண்களுடைய திருமண வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தையும் தொந்தரவுக்குள்ளாக்கும் ஒரு செயல்.

இந்த பிரச்னை இருப்பவர்கள் உடனடியாக சைக்கலாஜிகல் கவுன்சலிங், செக்ஸ் தெரபி எடுத்துக் கொள்ள வேண்டும். குணமாக அதிக நாள்கள் தேவைப்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.