ஸ்டார்பக்ஸின் (Starbucks) இணை நிறுவனரான Zev Siegl பெங்களூருவில் பில்டர் காபி குடித்த சம்பவம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பதிக்கே லட்டா, பழனிக்கே பஞ்சாமிர்தமா எனப் பலர் சொல்லிக் கேட்டு இருப்போம். அப்படியான ஒரு நிகழ்வு தான் ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனர் Zev Siegl பெங்களூருவில் பில்டர் காபி குடித்த சம்பவமும்…
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் காபி ஹவுஸ்களுக்கு மிகவும் பிரபலம். அமெரிக்காவின் வாஷிங்டன் சியாட்டிலில் இதன் தலைமையகம் உள்ளது. அதோடு இந்த நிறுவனத்தின் கிளைகள் பல நாடுகளிலும் தங்களின் தடங்களைப் பதித்துள்ளது.
இந்நிலையில் ஸ்டார்பக்ஸின் இணை நிறுவனரான Zev Siegl, மூன்று நாட்கள் நடைபெறும் `இன்வெஸ்ட் கர்நாடகா – உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில்’ கலந்து கொள்வதற்காகப் பெங்களூரு வந்துள்ளார்.
அப்போது பெங்களூரு, பசவனக்குடியில் உள்ள காந்தி பஜாரின் மையப்பகுதியில் அமைத்துள்ள பாரம்பர்ய தென்னிந்தியச் சைவ உணவகமான வித்யார்த்தி பவனுக்குச் (Vidyarthi Bhavan) சென்றவர், மசாலா தோசை சாப்பிட்டு, பில்டர் காப்பியையும் குடித்து, அதன் சுவை குறித்துப் பாராட்டியுள்ளார்.