புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தானை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்: அசத்தல் ஃபார்மில் டூப்ளசிஸ்

Share

cricket

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட்டில் சென்டிமென்ட் வெகுவாகப் பார்க்கப்படும் என்பது விளையாடும் வீரர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒரு வீரர் ஒரு பேட்டில் சதம் அடித்துவிட்டால் அந்த பேட்டின் மீது இனம்புரியாத சென்டிமெண்ட் இருக்கும்.

உதாரணமாக, 1983ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் கபில்தேவ் 175 ரன்கள் விளாசியது நினைவிருக்கும். அந்தப் போட்டியில் களத்தில் இருந்து பார்த்த இந்திய வீரர்கள் போட்டி முடியும்வரை தாங்கள் அமர்ந்திருந்த இடத்தைவிட்டுக்கூட நகரவில்லை என முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை நகர்ந்தால் கபில்தேவ் ஆட்டமிழந்துவிடலாம் என்ற சென்டிமென்டால் நகராமல் போட்டியைப் பார்த்தார்கள் என்று பலபேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் சென்டிமென்ட் பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்திலும் ஏப்ரல் 23-ம் தேதி, பச்சை நிற ஜெர்ஸி ஆகியவை ஆர்பிசி அணிக்கும், விராட் கோலிக்கும் பெரிய சென்டிமெண்ட்டை உருவாக்கியது. இந்த சென்டிமென்ட் பொய்த்ததா என்பதை பார்க்கலாம்.

பெங்களூருவில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த சீசனில் 3வது வெற்றியை சொந்தமண்ணில் பெற்றுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com