புற்றுநோயால் அவதியுறும் குழந்தைகளுக்காக ‘Tiffin of Togetherness’ நிகழ்வை ஏற்பாடு செய்த அப்போலோ! | Apollo Cancer Centre organizes Tiffin of Togetherness

Share

இந்நோயாளியின் வாக்ஸாலஜிஸ்ட் Ms. ஷியாமளா இது பற்றிப் பேசுகையில், “நமது வாழ்க்கையில் நாம் செலவிடும் நாட்கள் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன என்றாலும், நமக்கு நன்கு பரிச்சயமான குரல் அல்லது பழக்கமான முகத்தைப் பார்க்கும்போது சிரமங்களும், துயரங்களும் நிச்சயமாக குறையும் என்று நான் எப்போதும் நம்பியிருக்கிறேன்.  ஸ்ரேயாவின் புற்றுநோய் பாதிப்பு நிலை பற்றி நாங்கள் அறிய நேர்ந்தபோது, மனதை கடும் துயரத்தில் ஆழ்த்தும் செய்தியாகவே அது இருந்தது. ஆனால், அத்தகைய கடுமையான காலகட்டத்தின்போது அவளை நேரில் சந்திப்பதற்கும், எனது அன்பையும், தார்மீக ஆதரவையும் அவளுக்கு தெரிவிப்பதற்கு ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது உண்மையிலேயே எனக்கு பெருமகிழ்ச்சியை தந்தது. இத்தகைய அற்புதமான, வியப்பூட்டும் முனைப்புத் திட்டங்களின் மூலம் குழந்தைப் பருவ நோயாளிகளுக்கு கனிவும், தைரியமும் தரும் சிறப்பான சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்காக அப்போலோ கேன்சர் சென்டருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார். 

Cancer

Cancer
Representational Image

புற்றுநோயை எதிர்த்துப் போரிடும் போராளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் மற்றும் நேர்மறை உணர்வையும் வழங்குகின்ற புதுமையான செயல்திட்டங்களின் மூலம் தனது நோயாளிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்க ACC முனைப்புடன் செயல்படுகிறது.  புற்றுநோயை வெல்வதற்கான அவர்களது மனோதிடத்தையும், தைரியத்தையும் வலுப்படுத்த இத்தகைய முயற்சிகள் அவர்களுக்கு பெரிதும் உதவுகின்றன. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com