புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகத்துக்கு ஆபத்தா? மருத்துவரின் விளக்கம்! | If you eat a lot of protein-rich foods, is it dangerous for the kidney

Share

நம் உடலின் ஒவ்வோர் அணுவிலும் புரதச்சத்து (புரோட்டீன்) நிறைந்துள்ளது. தசை கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் புரதம் முக்கிய பங்கு அளிக்கிறது. எடைக்குறைவு , டைப் 2 நீரிழிவு போன்ற காரணங்களுக்காக, நாம் அதிக அளவில் புரதம் உட்கொள்கிறோம். ஆனால் புரோட்டீனின் தேவை நபருக்கு நபர் வேறுபடும். உடலின் எடையில், ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் தேவை. 50 கிலோ எடை கொண்டவர் என்றால், 40 கிராம் தேவை. தினமும் ஏதாவதொரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.

ஆனால், இதை அதிகளவில் சாப்பிட்டுவந்தால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தொடர்ந்து அதிகளவில் புரோட்டீன் உட்கொண்டால் தலைவலி, மலச்சிக்கல் மற்றும் இதய பிரச்னைகள் ஏற்படும். இது சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நம் உடலில் உள்ள கழிவுப்பொருள்களை வடிகட்டி வெளியேற்றும் பணியை சிறுநீரகம் செய்கிறது. ஆனால் அதிகளவில் புரோட்டீன் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தைச் சுற்றி உள்ள குளோமெருளி ஃபில்டர்ஸ் (Glomeruli filters ) பாதிக்கப்படும். இதனால் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். எனவே மருத்துவரின் அறிவுரையின்றி அதிக அளவில் புரோட்டீன் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com