புதுச்சேரி: `மதுக்கடைகள் அனுமதி’ குறித்து பேனர் வைத்த காங்கிரஸ் எம்.பி; கிழித்தெறிந்த அதிகாரிகள்! | In Puducherry,Officials removed the banners put up by Congress MP vaithilingam about the permits of bars

Share

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த நிலையில், தினமும் அது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் பெயரில் ராஜா திரையரங்கம் சந்திப்பில் நேற்றிரவு (15.03.2023) பொதுமக்களுக்காக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில்,

‘என்.ஆர் திறந்த புதிய மதுபானக் கடைகள் 350.

என்.ஆர் திறந்த புதிய மதுபான தொழிற்சாலைகள் 6.

என்.ஆர் திறந்த 350 மதுக்கடைகள் மற்றும் 6 மதுக்கடைகளில் வந்த வருவாய் எவ்வளவு?

பேனரை அகற்றும் அதிகாரிகள்

பேனரை அகற்றும் அதிகாரிகள்

முந்தைய ஆட்சியில் மூடப்பட்ட மதுபான தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது எப்படி ?

அதை முடிவு செய்தது ஆளுநரா… முதல்வரா…?

மதுக் குடியால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை?

புதுவையில் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா, போதைப்பொருள்கள் விற்பனையாவது எப்படி?

புதுவை மக்களை போதை புதைகுழியில் தள்ளுவது நியாயமா… தர்மமா?

புதுச்சேரியை மதுச்சேரியாக்குவதுதான் என்.ஆரின் கொள்கையா?’ என்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com