புதுச்சுவை புத்தாண்டு: இறால் மிளகு வறுவல் | Shrimp Pepper Roast

Share

செய்திப்பிரிவு

Last Updated : 29 Dec, 2019 10:16 AM

Published : 29 Dec 2019 10:16 AM
Last Updated : 29 Dec 2019 10:16 AM

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.

இறால் மிளகு வறுவல்

என்னென்ன தேவை?

இறால் – அரை கிலோ

வெங்காயம் – 2

தக்காளி – 2

மிளகாய்த் தூள்

– 2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு – 2டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க:

சோம்பு, கறிவேப்பிலை,

மல்லித் தழை – சிறிதளவு

எப்படிச் செய்வது?

இறாலைச் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். கொதிக்கும் தண்ணீரில் இறால், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு மூன்று நிமிடங்கள் கொதிக்கவைத்து எடுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சோம்பு, கறிவேப்பிலையைப் போட்டுத் தாளியுங்கள். நசுக்கிய இஞ்சி-பூண்டு, வெங்காயம் இரண்டையும் அதில் சேர்த்துச் சிவக்க வதக்குங்கள்.

தக்காளி, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். இப்போது இறாலைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீரை ஊற்றி மூடி வேகவிடுங்கள். தண்ணீர் வற்றியதும் மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறி, மல்லித்தழையைத் தூவி இறக்குங்கள்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com