புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அண்ணாமலை வலியுறுத்தல்

Share

சென்னை: புதுக்கோட்டை தேர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற அரைக்காசு அம்மன் பிரஹதாம்பாள் கோயில் தேர் திருவிழாவின் போது, தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது என்ற செய்தி கவலை அளிக்கிறது. புதுக்கோட்டையில் நடந்த தேர் விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விபத்து குறித்து நேரில் விசாரித்தபோது, பொதுப்பணித்துறை தேரின் நிலை குறித்து நற்சான்றிதழ் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அச்சு முறிந்து கவிழ்ந்து விபத்து ஏற்படும் நிலை இருக்கும்போது மாநில பொதுப்பணித் துறை எப்படி நற்சான்றிதழ் கொடுத்தது என்ற விபரம் புரியவில்லை. தமிழக அரசு காயமடைந்த மக்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com