`புகையிலை விளம்பர வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்காதது இதற்காகத்தான்’ – மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர் | Sachin Tendulkar says my father told me never to promote tobacco products

Share

லெஜெண்ட் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், தனக்குப் புகையிலை விளம்பர வாய்ப்புகள் வந்தபோதும் அதில் நடிக்கவில்லை என, நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். 

மகாராஷ்டிர அரசின் ஸ்வச் முக்ஹ் அபியான் (Swachh Mukh Abhiyan) என்ற `வாய் சுகாதார பிரச்சாரம்’ செவ்வாய்க் கிழமையன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், `ஸ்மைல் அம்பாசடர்’ (Smile Ambassador)’ என்று சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டார்.

Tobacco (Representational Image)

Tobacco (Representational Image)
Photo by Khai Nguyen on Unsplash

இந்த நிகழ்வில் பேசிய சச்சின் டெண்டுல்கர், “நான் இந்தியாவிற்காக விளையாடத் தொடங்கியபோது, பள்ளியை விட்டு வெளியேறினேன். புகையிலை தொடர்பான நிறைய விளம்பர வாய்ப்புகள் எனக்கு வர ஆரம்பித்தன. ஆனால் புகையிலை பொருள்களை ஒருபோதும் விளம்பரப்படுத்த வேண்டாம் என என் அப்பா என்னிடம் கூறியிருந்தார்.

அதன்பின் எனக்கு இதுபோன்ற பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் என் அப்பாவுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மீறக்கூடாது என்பதற்காக, நான் எதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com