பீகார் முதல்வராக நிதிஷ் மீண்டும் பதவியேற்பு.. துணை முதல்வர் ஆனார் தேஜஸ்வி யாதவ்

Share

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகனும் ராஷ்டீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

தனது முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து பிகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் அவர் கைகோர்த்தார். காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு அளித்தன. இதை தொடர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் உரிமை கோரினார்.

அதன்படி, இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பீகாரின் முதலமைச்சராக 8வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர்  பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதேபோல் துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுகொண்டார்.

முன்னதாக, பிகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் மொத்தமுள்ள 243 இடங்களில், 127 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தன. ஐக்கிய ஜனதா தளத்தைவிட, பாஜக அதிக இடங்களில் வென்ற போதும், நிதிஷ்குமாருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுதந்தது பாஜக.

இதையும் படிங்க: பேராசிரியையின் வேலையை பறித்த இன்ஸ்டாகிராம் நீச்சல் உடை புகைப்படம்

இச்சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக இரு கட்சிகளின் இடையே உரசல்கள் அதிகரித்தன.எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பாட்னாவில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்திய நிதிஷ்குமார், ஆளுநர் பகு சவுகானை நேற்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com