பி.வி.சிந்து, காஷ்யப் அபாரம்- சாய்னா தோல்வி – News18 Tamil

Share

மலேசிய ஓபன் பேட்மிண்ட்டன் தொடரில் பிவி சிந்து மற்றும் பாருபள்ளி காஷ்யப் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர். ஆனால் சாய்னா நேவால் மற்றும் பி சுமீத் ரெட்டி-அஷ்வினி பொன்னப்பா ஜோடி தோல்வியடைந்து வெளியேறினர்.

முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தாய்லாந்தின் உலகின் 10ம் நிலை வீராங்கனையான போர்ன்பாவி சோசுவாங்கை 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார், ஆனால் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையான ஐரிஸ் வாங்கை எதிர்த்து 11-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

முன்னாள் காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியனான பாருப்பள்ளி காஷ்யப்பும் காயத்தில் இருந்து சாதகமாக திரும்பினார், அவர் 21-12 21-17 என்ற கணக்கில் கொரியாவின் ஹியோ குவாங் ஹீயை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்த சுற்றில் ஏழாம் நிலை வீராங்கனையான சிந்து, உலக ஜூனியர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயதான பிட்டயபோர்ன் சாய்வானை எதிர்கொள்கிறார், இவர் பாங்காக்கில் நடந்த உபெர் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் காஷ்யப் அடுத்த சுற்றில் கடந்த மார்ச் மாதம் ஜெர்மன் ஓபன் சூப்பர் 300-ஐ வென்ற தாய்லாந்தின் குன்லவுட் விடிட்சார்னை சந்திக்கிறார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி சுமீத் ரெட்டி மற்றும் அஷ்வினி பொன்னப்பா, நெதர்லாந்தின் ராபின் டேபிலிங் மற்றும் செலினா பீக் ஜோடியிடம் 15-21 21-19 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com