பிஸ்கட் இருக்கா… அப்போ அரைமணி நேரத்தில் இந்த டிஷ் டிரை பண்ணி பாருங்க..!

Share

புதிய உணவுகளை சுவைப்பது எல்லாருக்கும் பிடித்த ஒன்று. தினமும் சாப்பிடும் உணவுகளை விட வித்தியாசமாக எதாவது சாப்பிட வேண்டும் என்ற தேடல் ஆரம்ப புள்ளியாக இருக்கும். அதே நேரம் வெளியே பெரிய பெரிய கடைகளுக்கு சென்று அதிகம் செலவழித்து புதிய உணவுகளை சுவைக்க முடியாது. அதற்கு பதிலாக அதை நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து வீட்டிலேயே செய்தால்?

ஆமாங்க! எல்லா டிஷ்களையும் அப்படி நம்மால் செய்து விட முடியாதுதான் என்றாலும் ஒரு சில உணவுகளை நம்மால் வீட்டில் செய்துவிடலாம். அப்படியான ஒன்றைத்தான் இப்போது உங்களுக்கு சொல்லித்தர இருக்கிறோம். பாயசம், கேசரி என்று தான் பொதுவாக நம் வீட்டில் இனிப்புகளை செய்வோம்.

அடுத்த முறை அதற்கு பதிலாக பிஸ்கட் வைத்து நட்சத்திர ஹோட்டல் முறையில் சூப்பரான டிராமிசு என்ற இனிப்பு வகையை செய்து பாருங்க. இந்த பாரம்பரிய இத்தாலிய இனிப்பு வகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்  பிடிக்கும். அதோடு இதை செய்ய வெறும் அரைமணி நேரம் போதும். அதோடு வீட்டுக்கு அருகில் இருந்தே இதற்கான பொருட்களை வாங்கி விடலாம்.

தேவையான பொருட்கள்: 

250 கிராம் விப்பிங் கிரீம்

200 கிராம் தூள் சர்க்கரை

1/4 கப்  காபி டிகாக்ஷன்

200 கிராம் மஸ்கார்போன் சீஸ்

1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்

தேவையான பிஸ்கேட்கள்

1 தேக்கரண்டி கோகோ தூள்

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் விப்பிங் க்ரீமை எடுத்து, அதை எலெக்ட்ரிக் பீட்டர் அல்லது மிக்சியில் மிதமான வேகத்தில் அடிக்கவும். விப்பிங் க்ரீம் இல்லை என்றால் சாதாரண கிரீம் கடைகளில் கிடைக்கும். அதை பயன்படுத்தலாம். அதன் பின்னர் பொடித்த  சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசென்ஸை கிரீமில் சேர்த்து அடிக்கவும்.

கொஞ்ச நேரம் நிதானமாக பீட் செய்யும்போது அது கொஞ்சம் அடர்த்தியாக மாறும். ஒரு ஸ்பூனில் கிரீமை மேலே எடுக்கும் போது அது சரியாமல் அப்படியே உப்பி வரும். அதுதான் சரியான பதம். இந்த பதம் வருவதற்கு 15 முதல் 20 நிமிடம் வரை ஆகும்.

இந்த நிலைக்கு வந்ததும் மஸ்கார்போன் சீஸ்ஸை க்ரீமோடு  கலக்கவும். அதையும் சேர்த்து கலந்து அடித்துக் கொள்ளவும். மஸ்கார்போன் சீஸ் இல்லாத போது சாதாரண, உப்பு கலக்காத  சீஸ்ஸை பயன்படுத்திக்கொள்ளலாம். தயாரானதும் இதைத் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

தனியாக ஒரு பாத்திரத்தில் திக்கான காபி டிக்காக்ஷன் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது டிராமிசுவிற்கு தேவையான அனைத்தும் ரெடி.  அழகாக அதை ஒரு கப் அல்லது டம்ளரில் அடுக்கினால் டிராமிசு ரெடி

பார்க்க அழகாக தெரிய கண்ணாடி டம்ளர் அல்லது கப்பில் பரிமாறலாம். முதலில் பிஸ்கட்டுகளை காபியில் நனைத்து கண்ணாடி கிண்ணத்தின் அடிப்பகுதியில் ஒரு அடர்த்தியான  அடுக்காக வைக்கவும். சீஸ்-கிரீம் கலவையில் ஒரு லேயர் அமைக்கவும்.

இதையும் பாருங்க: குழந்தைகளுக்கு ஏற்ற மென்று தின்னும் சுவையான சக்கரை குக்கீ ரெசிபி இதோ!

பின்னர், அதன் மேலே மீண்டும் நனைத்த பிஸ்கட்டுகளை வைத்து மற்றொரு அடுக்கை உருவாக்கவும். அதிகம் அழுத்தாமல் வைக்கவேண்டும். இல்லையேல் சீஸ் அடுக்கிற்குள் பிஸ்கெட்டுகள் மூழ்கிவிடும். அதன் பிறகு மீண்டும் கொஞ்சம்  சீஸ்-கிரீம் கலவையை வைக்கவும்.

இறுதியாக சீஸ்-கிரீம் கலவைக்கு மேலே கோகோ பவுடரை தூவி, உங்களுக்கு விருப்பமான துண்டுகளாக்கப்பட்ட உலர் பழங்கள், துருவிய முந்திரி, பாதாம்களை  அலங்காரமாக சேர்க்கவும். பின்னர் இந்த கப்களை குறைந்தது 2-3 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். நன்றாக குளிர்ந்த பின்னர் நன்றாக செட் ஆகி இருக்கும். அப்படியே எடுத்து சாப்பிடலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com