பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகளை ‘ஆசை காட்டி’ தன் பக்கம் இழுக்கும் சீனா

Share

  • கார்டன் கொரேரா
  • பாதுகாப்பு விவகார செய்தியாளர், பிபிசி

ராயல் விமானப்படை விமானம்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனின் முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்திற்கு தங்களது நிபுணத்துவத்தை வழங்குவதற்காக சீனாவால் ஆசை காட்டி ஈர்க்கப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளால் கூறப்படுகிறது. பெருமளவிலான பணம் அவர்களுக்கு வழங்கபடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் முன்னாள் ராணுவ விமானிகள் 30 பேர் வரை, சீன மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சியளிக்கச் சென்றதாகக் கருதப்படுகிறது. சீன ராணுவத்தில் பணியாற்றும் அந்த முன்னாள் ராணுவ விமானிகளுக்கு பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமானிகளை ஆசைவார்த்தை கூறி ஈர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் சமீபத்தில் அந்த முயற்சி அதிகரித்து வருவதாகவும் மேற்கத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “விமானிகளின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு தற்போதைய பிரிட்டன் சட்டத்தை மீறவில்லை. ஆனாலும் பிரிட்டன் மற்றும் பிற நாடுகளிலுள்ள அதிகாரிகள் இதைத் தடுக்க முயல்கின்றனர்,” என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com