பிரிக்ஸ் மாநாடு: மோதி- ஷி ஜின்பிங் இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை- மோதி என்ன சொன்னார்?

Share

பிரிக்ஸ் மாநாடு

பட மூலாதாரம், X/narendramodi

படக்குறிப்பு, மோதி மற்றும் ஷி ஜின்பிங்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தின.

இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.

இரு தலைவர்களும் 50 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பிரதமர் மோதியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோதி எக்ஸ் பக்கத்தில், “கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தேன். இந்தியா- சீனா உறவுகள் நமது நாட்டு மக்களுக்கும், இந்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இருதரப்பு உறவுகளை வழிநடத்தும்”, என்று பதிவிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com