புதுடெல்லி: பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு 3 தவணை வழங்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘உணவு வழங்கும் மக்களின் உரிமையை பறிப்பது தான் மோடி அரசின் கொள்கையாகும். பிரதமரின் கிசான் திட்டத்தின் முதல் தவணை கடந்த 2019ம் ஆண்டு வழங்கப்பட்ட போதிலிருந்து தற்போது 67 சதவீதம் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது பயனாளிகள் எண்ணிக்கை 11.87 கோடியில் இருந்து கடைசியாக மே மாத தவணை வழங்கப்பட் போது பயனாளிகள் எண்ணிக்கை 3.87 கோடியாக சரிந்துள்ளது. ஒவ்வொரு தவணைக்கும் பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது தான் உண்மை. விவசாயிகளின் உரிமையை பறிப்பதன் மூலமாக நீங்கள் யாருக்கு பலன் அளிக்கிறீர்கள்?’ என கூறி இதுதொடர்பான வரைபட வீடியோவையும் அவர் வெளியிட்டார்.இதனை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய வேளாண் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆரம்பத்தில் 3.16 கோடி பேராக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்து 10 கோடியை தாண்டியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தில் ஒவ்வொரு தவணைக்கும் பயனாளிகள் குறைகின்றனர்: கார்கே குற்றச்சாட்டு
Share
