பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறை 3 நாட்களாக நடத்திய ஆய்வு நிறைவு

Share

டெல்லி பிபிசி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு நிறைவடைந்தது.

இதையடுத்து அத்துறையின் அதிகாரிகள் குழு பிபிசி அலுவலகங்களை விட்டு வெளியேறியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பிரிட்டனில் பிபிசியின் ஆவணப்படம் ஒளிபரப்பான சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

முன்னதாக, பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வு நடவடிக்கைக்கு ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com