பிபிசி இந்தியா: செய்தியாளர்கள் அச்சமின்றி செய்தி வழங்கக் கூறிய பிபிசி தலைமை இயக்குநர்

Share

பிபிசி
படக்குறிப்பு,

டிம் டேவி இந்தியாவில் உள்ள பிபிசி ஊழியர்களிடம் அவர்கள் பணியை பாதுகாப்பாகச் செய்ய உதவுவது தனது வேலை என்று கூறினார்

பிபிசி அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்குவதை தடுக்க முடியாது என்று அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.

பிபிசி ஊழியர்களின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்த டிம் டேவி, பாரபட்சமின்றி செய்தி வழங்குவதை விட முக்கியமானது எதுவுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் பிபிசி, சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சிக்கும் வகையிலான ஆவணப்படத்தை ஒளிபரப்பியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com