உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31), அபிகையில் அடோனி(30) ஆகியோர் இன்று கர்நாடகா மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்து இறங்கினர். அவர்களது டிராலி பேக்கை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு பேரிடமும் மொத்தம் 37 கிலோ போதைப்பொருள் இருந்தது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.75 கோடியாகும். போதைப்பொருள் மட்டுமல்லாது ரூ.18 ஆயிரம் பணமும், பாஸ்போர்ட், மொபைல் போன் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் அகர்வால் கூறுகையில்,”‘நைஜீரியாவை சேர்ந்த இரண்டு பெண்களும் டெல்லியில் இருந்து கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானத்தில் போதைப்பொருளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்துள்ளனர்.