பாலியல் சுரண்டல் படங்கள், காணொளியை பிறரது அனுமதி இல்லாமல் எடுக்க தடை – ஜப்பானில் வருகிறது சட்டம்

Share

ஜப்பான் பாலியல் குற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்த ஜப்பான் அதன் தண்டனைச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உத்தேசித்து வருகிறது.

சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலின்றி அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டும் வகையிலான படங்கள் அல்லது காணொளியாக பதிவு செய்வதற்கு எதிராக ஜப்பானில் முதல் முறையாக தேசிய அளவிலான சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை அந்நாட்டு எம்.பிக்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர்.

பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் ஆபாச படம் அல்லது காணொளியை பதிவு செய்து சுய இன்பம் காணும் “ஃபோட்டோ வோயூரிஸம்” எனப்படும் போக்குக்கு எதிரான மசோதா, சட்ட வடிவம் பெற்றால், அது ஒருவரது அனுமதியின்றி அவர் தமது மேலாடையை கழற்றும்போது அதை ரகசியமாக வேறொரு நபர் பதிவு செய்வதை தடை செய்யும்.

ஜப்பானில் தற்போது வரை, இத்தகைய குற்றவியல் செயல்களுக்கு உள்ளூர் மாகாண சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்படும். ஆனால், அங்கு மாகாணத்துக்கு மாகாணம் இந்த குற்றங்களுக்குான தண்டனைகள் பெரிய அளவில் மாறுபடுகின்றன.

இந்நிலையில், தற்போது அறிமுகமாகவிருக்கும் சட்ட மசோதா, பாலியல் குற்றங்கள் தொடர்பான ஜப்பானிய சட்டங்களின் மிகப்பெரிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும், பாலியல் வல்லுறவு என்பதன் விளக்கத்தையும் இந்த மசோதா விரிவாக பொருள்படுத்தும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com