பாலியல் உறவுக்கு பேரம்: தடயம் கிடைக்காத இரட்டை பெண்கள் கொலையில் சந்தேக நபர் சிக்கியது எப்படி?

Share

குஜராத் இரட்டை கொலை
  • குஜராத்தின் ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் விறகு வெட்டிய இரு பெண்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.
  • ஆற்றுப் படுகைகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டபோதும், சுற்றியிருந்த புதர்களில் பிறரின் காலடிச் சுவடுகள் தென்படவில்லை.
  • மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆய்விலும் எந்த தடயமும் சிக்கவில்லை. எனவே தொழில்நுட்ப ஆய்வு சாத்தியமற்றுப் போனது.
  • வழக்கமாக குளித்த ஐந்தே நிமிடங்களில் குளித்தவரை கொலை நடந்த அன்று ஒரு மணி நேரம் குளித்தார். அதுவே சந்தேகத்தை வலுவாக்கியது.

“ஆமதாபாத்தின் கன்பா கிராமத்தில் நடந்த இரண்டு பெண்களின் கொலைக்கும் தடயம் கிடைக்கவில்லை. ஒரு வார கடின உழைப்பின் முடிவில் பண்ணை வேலையாள் ஒருவரும் மரம் வெட்ட வந்த பெண்களும் ஒரே இடத்தில் வேலை செய்வது தெரிய வந்த பிறகு துப்பு துலங்கியது.”

“தொழில்நுட்ப தடயங்கள் கிடைக்காதால் மனித உளவு அடிப்படையில் புலனாய்வை தீவிரப்படுத்தினோம். வழக்கமாக ஐந்து நிமிடத்தில் குளித்து முடிக்கும் பண்ணை வேலையாள், சம்பவ நாளில் ஒரு மணி நேரம் குளிக்க நேரம் எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார். உடலுறவு செய்ய தயாராக இல்லாததால் அந்த இரு பெண்களை கொன்றிருக்கிறார்.”

இந்த வார்த்தைகள் ஆமதாபாத் குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சிங். சிசோடியா தெரிவித்தவை. எப்படி நடந்தது இந்த இரட்டைக் கொலைகள்? துப்பு துலக்கியது எப்படி?

ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் உள்ள பண்ணை நிலப் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு விறகு வெட்ட வந்த இரண்டு பெண்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com