பாலக்கீரை இருக்கா..? 15 நிமிடத்தில் இந்த சுவையான டிஷ் செஞ்சிடலாம்… ரெசிபி இதோ..

Share

குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினமான காரியம். பொரியல், கடைசல் என்று செய்தாலும் குழந்தைகள் அதை எளிதாக ஒதுக்கிவைத்து சாப்பிட்டு விடுவர். அவர்களை கீரை சாப்பிட வைக்க அதை எதாவது சுவாரஸ்யமான ரெசிபியாக மாற்ற வேண்டும்.

பாலக் கீரை வைத்து பாலக் பன்னீர் செய்யலாம். சப்பாத்தி, நான் போன்றவற்றுடன் சாப்பிட எதுவாக இருக்கும். அதையும் குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் அதற்கு ஒரு தேர்வு வேண்டும் அல்லவா? அதற்காக தான் அதே பாலக் மற்றும் பன்னீரை வைத்து ஒரு ஊத்தப்பம் செய்யும் ரெசிபியை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

விளம்பரம்

பாலக் பன்னீர் ஊத்தப்பம் செய்யத் தேவையானவை:

1 கப் பாலக் கீரை அரைத்த விழுது

1 கப் ரவை

1/2 கப் தயிர்

1 சிட்டிகை சோடா உப்பு

உப்பு சுவைக்க

1/2 கப் பன்னீர் துருவியது

1/2 வெங்காயம்,பொடியாக நறுக்கியது

1/2 தக்காளி, பொடியாக நறுக்கியது

1 டீஸ்பூன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது

1 டீஸ்பூன் கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது

பாலக் பனீர் ஊத்தாபம் செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்து, அதனுடன் தயிர், உப்பு மற்றும் கீரை அரைத்த விழுது சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவின் நிலைத்தன்மையை சரிசெய்து தனியாக சிறிது நேரம் ஊற வைக்கவும்.

இதையும் பாருங்க : 
குறையும் தக்காளி விலை… ருசியான இந்த ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள்

அது ஊரும் நேரத்தில் பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.இது தான் ஊத்தாப்பத்திற்கான சுவைகூட்டும் மசாலா. இப்போது மாவில் சோடா உப்பு மற்றும் சிறிது தண்ணீர் கலந்து, மீண்டும் சிறிது நேரம் ஊறவிடவும்.

உயர் இரத்த அழுத்தத்தை உடனடியாக உயர்த்தக்கூடிய முதல் 10 உணவுகள்.!


உயர் இரத்த அழுத்தத்தை உடனடியாக உயர்த்தக்கூடிய முதல் 10 உணவுகள்.!

ஒரு தவாவில் சிறிது எண்ணெயை சூடாக்கி, இப்போது ஒரு கரண்டி  மாவை ஊற்றி பரப்பி, அதன் மீது கலந்து வைத்த மசாலா தூவி லேசாக அழுத்தவும். அப்போது தான் மாவோடு இந்த மசாலா சேரும். பிரிந்து வரத்து.ஒரு பக்கம் கொஞ்சம் பொன்னிறமானதும்  ஊத்தாப்பத்தை மெதுவாக திருப்பி, மற்றொரு பக்கத்திலிருந்தும் உத்தாபத்தை வேகவைக்கவும். தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

  • First Published :

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com