ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையின் கீழ் மூடப்பட்ட அறையில் மரம் அல்லது நிலக்கரியிலிருந்து உருவாகும் நெருப்பை பயன்படுத்தி இறைச்சியைப் சமைக்கப் பயன்படுத்தப்படும் பழமையான நுட்பங்களில் ஒன்று பார்பிக்கியூ (barbequed).
பார்பிக்யூ உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு வகைகளை ரசித்து உண்பெதென்பது தற்போது ஃபேஷனாகி வருகிறது. இறைச்சி அல்லது கடல் உணவு வகைகளை லேசான வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு அதில் மசாலா தடவி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் வந்து கேட்கும் போது கிரில் அடுப்பில் வைத்து மீண்டும் சுட்டு பரிமாறுவார்கள். பார்பிக்யூ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Also Read : இரைப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவு பழக்கம் – விளக்கும் நிபுணர்கள்..!
பார்பிக்யூ செய்யப்பட்ட இறைச்சிகள் ஆரோக்கியமானவை என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் அவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடிய உணவு முறைகள் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். அதாவது சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது அதில் heterocyclic amines (HCAs) எனப்படும் கார்சினோஜன்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லும் என்கின்றனர்.

பார்பிகியூ தயார் செய்யும் போது உருவாகும் இரண்டு இரசாயனங்கள் HCA-க்கள் மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs) ஆகியவை DNA-வை மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை. நீங்கள் எவ்வளவு நேரம் இறைச்சியை கிரில் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிக HCAக்கள் மற்றும் PAH-க்கள் உருவாகின்றன. இதனால் மரபணு நோய்கள் ஏற்பட வாய்ய்புகள் அதிகம். மேலும், உங்கள் உடலில் வயதான செயல்முறையை துரிதப்படுத்தலாம்.
ஆனால், “HCA-க்கள் மற்றும் PAH-க்கள் உடலில் உள்ள குறிப்பிட்ட நொதிகளால் வளர்சிதைமாற்றம் செய்யப்பட்ட பின்னரே டிஎன்ஏவை சேதப்படுத்தும் திறன் கொண்டவை. இந்த நொதிகளின் செயல்பாடு ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடலாம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. எனவே புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து ஒவ்வொரு உடலுக்கும் வேறுபடலாம்.
Also Read : PCOS பிரச்சனை உள்ளவரா நீங்க..? சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத உணவுகள்
அதிக நேரம் சமைத்த உணவை மீண்டும் சமைத்து உண்பதால் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது. உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளாத பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்த சுடப்பட்ட இறைச்சிகளில் உள்ள அதிக நிறைவுற்ற கொழுப்பு, புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

பார்பிக்யூ செய்யப்பட்ட இறைச்சியை உட்கொள்வதை பல்வேறு வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுவதால், இந்த இறைச்சிகள் எவ்வளவு ஆரோக்கியமற்றவை என்பதைக் கருத்தில் கொள்வது முக்கியம். குடும்பத்துடன் அடிக்கடி உணவகங்களுக்கு சென்று பார்பிக்யூ சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், குழந்தைகள் அடிக்கடி விரும்பி கேட்கிறார்கள் எனக் கூறி உணவகங்களுக்கு சென்று பார்பிகியூ செய்து சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டில் செய்யப்பட்ட மசாலாக்களில் தயார் செய்யப்பட்ட பார்பிக்யூவை சமைத்து சாப்பிடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.