`பார்ட்னரின் சடலத்துக்கு கீழே மறைந்து இருந்தேன்’ – ஹமாஸ் தாக்குதலில் தப்பிய பெண் உருக்கம்! | Israeli Model Reveals She Hid Under Her Boyfriend’s Dead Body During Hamas Attack

Share

துப்பாக்கி ஏந்திய ஒருவர் எங்களைக் கண்டுபிடித்து என் காதலனை மார்பில் சுட்டார். அவர்கள் எங்களை முற்றிலும் வளைத்து இடைவிடாமல் சுட்டுக்கொண்டே இருந்தார்கள். எனக்குக் காலிலும் இடுப்பிலும் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டது.

எனக்குக் காயங்கள் இருந்தபோதும் இரண்டு மணிநேரம் எந்தச் சத்தமும் ஏற்படுத்தாமல் பிணக் குவியல்களுக்கு மத்தியில் அமைதியாக இருந்தேன். என் பார்ட்னரின் சடலத்துக்குக் கீழ் மறைந்து இருந்தேன். 

உடல்களின் குவியலுக்கு மத்தியில் நான் இருந்ததால் இறந்துவிட்டதாக அவர்கள் கருதினார்கள். அங்கே குப்பைத் தொட்டியில் மறைந்திருந்த 16 பேரில் நால்வர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கொல்லப்படும் பாலஸ்தீனக் குழந்தைகள்

கொல்லப்படும் பாலஸ்தீனக் குழந்தைகள்

இறுதியாக இவர் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு முதலுதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தான் தாக்குதலில் இருந்து தப்பித்தது குறித்து அப்பெண் கூறியுள்ள நிகழ்வுகள் பலரிடையே கவனம் பெற்று வருகின்றன. 

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலால் 1,400 இஸ்ரேலியர்களை ஹமாஸ் குழு கொன்றிருக்கிறது. இதற்குப் பதிலடியாகத் தற்காத்துக் கொள்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் மொத்தமாக 9,000-க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்துள்ளது. இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே 7,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 

போர் என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாகாது. ஆதிக்கத்துக்கு இடையில் சிக்கித் தவிப்பது என்னவோ அப்பாவி மக்களும், பெண்களும், குழந்தைகளுமே…  

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com