பார்க்கர்: சூரிய வளிமண்டலத்திற்குள் முதன் முறையாக நுழைந்த நாசா விண்கலம் – என்ன செய்கிறது?

Share

பார்க்கர் சோலார் புரோப், நாசா

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது

நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, ஒரு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பார்க்கர் விண்கலம் (Parker Solar Probe) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சை தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.

அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 28 அன்று 05:00 (GMT) மணிக்கு (இந்திய நேரப்படி காலை 10.30 மணி), இந்த விண்கலத்திலிருந்து சமிக்ஞை கிடைக்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அதன் பிறகு தான் இது தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதா என்பது தெரிய வரும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com