பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதிக்கு பாராட்டு | Kudos to Tulsimati who Won Silver Medal on Paralympics

Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசினார். இதில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து துளசிமதிகூறியது: பாரீஸில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மிண்டன் விளையாட்டில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு சிறிய வயதிலிருந்தே விளையாட்டின் மீதுஅதிக ஆர்வம். கடந்த 13 வருடமாக பயிற்சி பெற்று வருகிறேன். காஞ்சிபுரம் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். தனியார் பயிற்சி மையத்துக்கும், தனியாக பயிற்சி நபரிடமும் நான் பயிற்சிக்கு செல்லவில்லை. எங்களை போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உறுதுணையாக உள்ளது.

பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு உபகரணங்கள், நீச்சல் மற்றும் பிற வசதிகளையும் செய்து தருவதுடன், எங்களுக்கு பல திட்டங்கள் மற்றும் அரசு துறையில் வேலை வாய்ப்புகள் செய்து தருகின்றனர். மேலும் பொதுப்பிரிவினருக்கு ஏற்படுத்தப்படும் வசதிகள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கும் செய்து தருகின்றனர். அதற்குநன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com