பாமக செயலாளர்கள் இருவர் பதவி பறிப்பு: அன்புமணி ராமதாஸ் அதிரடி

Share

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை மந்தைவெளியை சேர்ந்த ர.ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார்.

 அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com