பாட்மிண்டனில் வெண்கலம் வென்றார் தன்வி ஷர்மா! | tanvi sharma won bronze in badminton

Share

சோலோ: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தன்வின் ஷர்மா, வெண்ணால கலகோட்லா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இந்தோனேஷியாவின் சோலோ நகரில் ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 13-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் யின் யி குயிங்கிடம் தோல்வி அடைந்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான வெண்ணால கலகோட்லா 15-21, 18-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லியு ஷி யாவிடம் வீழ்ந்தார். அரை இறுதியில் தோல்வி அடைந்த தன்வி ஷர்மா, வெண்ணால கலகோட்லா ஆகியோர் வெண்கலப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்துள்ளனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com