பாஜ திட்ட செயல்பாடுகள் விளக்க பொதுக்கூட்டம்

Share

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், பொன்னேரி அருகே மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காட்டில் நேற்று மாலை பாரதிய ஜனதா மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் பசியாவரம் சுப்பிரமணி தலைமை தாங்கினர்.  

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராஜ், திவாகரன், பொருளாளர் சங்கர் குமார், மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வெங்கடசுப்பிரமணியம், மாவட்ட பிரசாரப் பிரிவு தலைவர் வினோத், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், பொதுச் செயலாளர் எம்.முத்து, பொன்னேரி நகர தலைவர் எம்.பி.மோகன், செயற்குழு உறுப்பினர் நாகமணி, மாவட்டச் செயலாளர் விஜயா, ஜானகி, இளைஞரணி துணை தலைவர் சீனிவாசன், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய மீனவர் பிரிவு தலைவர் எஸ்.முத்து, மீஞ்சூர் வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சந்திரமோகன் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com