பாஜ தலைவரின் குற்றச்சாட்டு பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் உள்ளது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி

Share

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகள், பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பதுபோல் உள்ளதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா சென்னை உயர் நீதிமன்றம் ஆவின் கேட் அருகே நேற்று நடைபெற்றது. திமுக சட்டத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திமுக சட்டத் துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் விடுதலை, சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கேக் வெட்டி பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் பேட்டியளித்தபோது, வழக்கறிஞர்களின் சேமநல நிதியைரூ. 10 லட்சமாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டு அதை செயல்படுத்தியுள்ளார். இதுபோன்று பல திட்டங்கள் திமுக அரசு செயல்படுத்து சாதனை படைத்துள்ளது. பாஜ தலைவர் அண்ணாமலையின் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். அவரது குற்றச்சாட்டு பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பது போல் உள்ளது என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com